இந்தியாவை மீட்டெடுத்த ரஹானே-புஜாரா ஜோடி; 240 ரன்கள் இலக்கு!!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற 140 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி

ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின்போது, 2வது இன்னிங்சில் விளையாடி வரும் இந்திய அணி 2-வது நாள் முடிவில் 85 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ரஹானே மற்றும் புஜாரா இருவரும் களத்தில் இருந்தனர்.

அதிரடியாக விளையாடி வந்த புஜாரா 3வது நாள் ஆட்டத்தில் அதையே தொடர்ந்தார். 3ம் நாள் துவக்கத்தில் தொடர்ந்து பவுண்டறிகளாக விளாசி இந்திய அணிக்கு ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 111 ரன்கள் சேர்த்து இருந்தது.

ரஹானே 58 ரன்களுக்கும் புஜாரா 53 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், நிலைத்து ஆடி வந்த விகாரி விக்கெட் கொடுக்காமல் இருந்தார். பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் தனது அதிரடியை காட்டிய தாகூர், வேகமாக 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 239 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

தென் ஆப்பிரிக்க அணி 2வது டெஸ்ட் போட்டியில் வெல்வதற்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த விஹாரி 40 ரன்கள் அடித்திருந்தார். இந்த மைதானத்தில் இதற்கு முன்னர் அதிகபட்சமாக 239 ரன்கள் சேஸ் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல பார்மில் இருப்பதால் குறிப்பிட்ட இலக்குக்குள் தென்ஆப்பிரிக்க வீரர்களை கட்டுப்படுத்தி விக்கெட் வீழ்த்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தென்ஆப்பிரிக்கா மைதானத்தில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,500FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles