இவங்கள மட்டும் வெளிய உக்கார சொல்றீங்க.. ஆனால் கேப்டனை விட்டுடுறீங்க; கோஹ்லியை சாடிய முன்னாள் வீரர்!!

புஜாரா, ரஹானே இருவரை போன்று விராட் கோலியும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் ஆஷிஸ் நெஹ்ரா.

இந்திய கிரிக்கெட் அணி இந்தியா, இங்கிலாந்து மற்றும் தற்போது தென் ஆப்பிரிக்கா என வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக விளையாடி வெற்றிகளையும் தொடர்களையும் கைப்பற்றி வருவதால் நேர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் மூத்த வீரர்களான புஜாரா மற்றும் ரகானே இருவரும் கடந்த ஒரு வருடமாக பெரிதளவில் சோபிக்கவில்லை. தொடர்ச்சியாக சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து வருவதை அடுத்தடுத்த தொடர்களில் நம்மால் பார்க்க முடிகிறது.

நடைபெற்றுவரும் தென்ஆப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். இதனால் இவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகின்றன, விரைவில் வெளியில் அமர்த்திவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை இந்திய அணி நிர்வாகம் கொடுக்கவேண்டும் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறுகையில், “மூத்த வீரர்கள் ரகானே மற்றும் புஜாரா இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழப்பது கண்டிப்பாக விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டும். துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்கும் பொழுது, மிடில் ஆர்டரில் இருக்கும் இவர்கள் தான் அணியை சரிவில் இருந்து மீட்க வேண்டும். குறிப்பாக இத்தகைய அனுபவம் மிக்கவர்கள் ஒரு சில போட்டிகள் தவறு செய்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தொடர்ச்சியாக செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேநேரம் கேப்டன் விராட் கோலியும் இதுபோன்ற தவறை செய்து வருகிறார். ஒரே மாதிரியான தவறை முதல் டெஸ்ட் போட்டியில் செய்ததை நாம் பார்த்தோம். கேப்டன் என்பதால் அவரை வெளியேற்ற முடியாது என ஒருதலைபட்சமாக கூறிவிடமுடியாது. சிலநேரங்களில் கேப்டன் தாமாக முன்வந்து ஒரு சில போட்டிகளில் வெளியில் அமர்ந்து தன்னை மீண்டும் பார்மிற்கு கொண்டு வரவேண்டும். விராட் கோலிக்கு எப்படி வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறதோ, அதுபோல புஜாரா மற்றும் ரகானே இருவருக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்படுவது சரிதான். வெளிநாட்டு மைதானங்களில் இந்திய அணிக்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.” என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,500FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles