ஒத்தையா நின்னு கெத்தா முடிச்சு கொடுத்த கேப்டன், தென்னாபிரிக்கா அணி அபார வெற்றி!! 1-1 சமன்..

இரண்டாவது போட்டியை தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 50 ரன்கள் அடித்திருந்தார். 

முதல் இன்னிங்சை தொடர்ந்த தென்ஆப்பிரிக்கா அணி 229 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பீட்டர்சன் 62 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணிக்கு அபாரமாக பந்துவீசிய தாக்கூர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 27 ரன்கள் பின்தங்கியிருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது.

துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 3வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் சேர்ந்த ரகானே மற்றும் புஜாரா ஜோடி அதிரடியாக விளையாட தொடங்கியது. இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்தது. புஜாரா 53 ரன்களுக்கும், ரஹானே 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இரண்டாவது இன்னிங்சில் 266 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 239 ரன்கள் முன்னிலை பெற்றது. 

240 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யலாம் என்ற முனைப்பில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு, மார்க்ரம் நல்ல துவக்கம் அமைத்துக்கொடுத்து ஆட்டம் இழந்தார். இவர் 31 ரன்கள் அடித்திருந்தார். துவக்க வீரர் மற்றும் கேப்டன் டீன் எல்கர் 46 ரன்கள் அடித்திருந்தார். மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது.

இன்னும் வெற்றிக்கு இன்னும் 122 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக தடைபட்டது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு துவங்கிய ஆட்டத்தில், துவக்கம் முதலே டீன் எல்கர் மற்றும் வேன் டர் டசன் இருவரும் அதிரடியாக ஆட தொடங்கினர். இவர்களை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் திணறி வந்தனர். 

வேன் டர் டசன் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த பவுமா நிதானமாக விளையாடி 23 ரன்கள் அடித்திருந்தார். கடைசிவரை விட்டுக் கொடுக்காமல் நங்கூரம் போல் நிலைத்து நின்ற கேப்டன் டீன் எல்கர் 96 ரன்கள் அடித்திருந்தார். தென்ஆப்பிரிக்கா அணி இறுதியில் 243 ரன்கள் எடுத்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து, போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 1-1 என கணக்கில் சமன் செய்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,491FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles