வீடியோ: “உன் முட்டாள்தனம்.. வாய மூடிட்டு போயி நில்லு”.. தென்னாபிரிக்க வீரரை திட்டிய ரிஷப் பண்ட்!!

இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது தன்னிடம் பேசிய தென்னாப்பிரிக்க வீரரை வார்த்தைகளால் திட்டி இருக்கிறார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வரும் 2வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 202 ரன்கள் எடுத்திருந்தது. முதல் இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் எடுத்தது.

27 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடியது. இரண்டாம் நாள் முடிவில் 85 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

3வது நாளில் விளையாடிய இந்திய அணிக்கு அதிரடியான துவக்கம் கிடைத்தது. புஜாரா மற்றும் ரகானே இருவரும் அரைசதம் கடந்த பிறகு ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த விகாரி 40 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 266 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் 239 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது.

இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது, ரிஷப் பண்டிடம் தென் ஆப்பிரிக்க வீரர் வேன்டர் டசன் பேசினார். அப்போது, ‘நான் அவுட் ஆகவில்லை என்று உனக்கு தெரியுமே, அப்படி இருக்கும் பொழுது எதற்காக ஏமாற்றினாய்?.’ என கேள்வி எழுப்பினார். உடனடியாக பதிலளித்த ரிஷப் பண்ட், ‘அரைகுறை அறிவு எங்க போச்சு.. எதுவும் பேசாம வாய மூடிகிட்டு அப்படி ஓரமா போய் நில்லு.!’ என திட்டினார்.

முதல் இன்னிங்ஸில் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது, வேண்டர் டாசன் அடித்த பந்தை பண்ட் கேட்ச் பிடித்தார். அவுட் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ரிஷப் பண்ட் கேட்ச் பிடிப்பதற்கு முன்பு, பந்து முன்னே குத்திவிட்டது. வேகமாக வந்ததால் சரியாக தெரியவில்லை. மிகப் பெரிய திரையில் ஸ்லோவ் மோஷனில் பார்க்கும்போது, இது தெளிவாக தெரிந்தது. இந்த விவகாரத்தை மையமாகக் கொண்டே இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடந்து இருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,506FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles