இதே கதைய எவ்ளோ நாள் சொல்லுவீங்க, ஒழுங்க ஆடலைனா வெளிய போ; இளம் வீரருக்கு டோஸ் விட்ட கவாஸ்கர்!!

இரண்டாவது இன்னிங்சில் பொறுப்பில்லாமல் விளையாடிய ரிசப் பண்ட்டை கடுமையாக சாடியிருக்கிறார் இந்திய அணியின் ஜாம்பவான் கவாஸ்கர்.

ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 8 விக்கெட்டுகள் தேவை இருக்கின்றன. ஆனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 122 ரன்கள் மட்டுமே மீதமிருக்கின்றன. மேலும் இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெறுவது கடினம் என்றே பலரும் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் துடிப்புடன் இருப்பதால் நிச்சயம் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்பி விடும் என்றும் சிலர் தங்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

இரண்டாம் நாள் முடிவில் 85 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் வழக்கத்திற்கு மாறாக அதிரடியாக விளையாடினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 155 ரன்கள் இருக்கையில் ரஹானே ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளிலேயே புஜாரா ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு வந்த பண்ட், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் சென்றதால் நிலைத்து விளையாடாமல் தனது இயல்பான ஆட்டம் என அதிரடியை ஆடத் துவங்கினார். அவர் ஆடிய மூன்றாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்திய அணி இக்கட்டான சூழலில் இருக்கையில் இப்படி பொறுப்பில்லாமல் ஆட்டம் இழந்ததால் இவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதற்கு அடுத்ததாக வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழக்க, இறுதியில் இந்திய அணி 266 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன்மூலம் 239 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்திய அணி ஆடிய விதத்திற்கு, முன்னிலையில் குறைந்தபட்சம் 300 ரன்கள் எட்டிவிடும் என பலரும் எதிர்பார்த்தனர்.

முக்கியமான கட்டத்தில் ரிஷப் பண்ட் பொறுப்பில்லாமல், ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 250 ரன்களுக்கும் குறைவான முன்னிலை பெற்று சுருண்டு விட்டது. இதன்காரணமாக ரிஷப் பண்ட் மீது தனது காட்டமான கருத்தை முன்வைத்திருக்கிறார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். அவர் கூறுகையில்,

“ரிஷப் பண்ட் இயல்பான ஆட்டம் அதிரடி தான் என பலரும் கூறிக் கொள்ளலாம். ஆனால் அந்த குறிப்பிட்ட சூழலில், அணிக்கு என்ன தேவைப்படுகிறதோ, அதன்படி சில நேரங்களில் விளையாட வேண்டும். இல்லை எனில் அவரை அணியில் எடுத்ததற்கு பிரயோஜனமில்லை. அவர் இரண்டாவது இன்னிங்சில் ஆடிய விதம் முட்டாள்தனமாக இருந்தது. அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் சென்ற பிறகு இப்படி பொறுப்பில்லாமல் அடித்து ஆடுவேன் என்று விளையாடி ஆட்டமிழந்தது மிகப்பெரிய தவறு, இதற்காக தனது இயல்பான ஆட்டத்தின் மீது காரணத்தைக் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

இதே நிலை தொடர்ந்தால் அவரை அடுத்தடுத்த தொடர்களில் எடுப்பதற்கு எந்தவித பலனும் இல்லை. பொறுப்புடன் விளையாட வேண்டும். இளம்வயதிலேயே எந்தவித பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் விளையாடுவது சரியல்ல.” என்று கடுமையாக சாடினார்.

மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது தென்ஆப்பிரிக்க அணி. இது இந்திய அணிக்கு பின்னடைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,490FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles