டெஸ்டில் தோனிக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு புதிய சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

தென்னாபிரிக்கா தொடரின்போது, விக்கெட் கீப்பிங் இல் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.

நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது நூறாவது கேட்சை பதிவு செய்தார். 100 கேட்ச்கள் மற்றும் அதற்கு மெல் பிடித்த நான்காவது இந்திய விக்கெட் கீப்பர் ஆவார். முன்னாள் கேப்டன் தோனி 256 கேட்ச்கள் பிடித்து தற்போது வரை முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்டில் அதிக கேட்சுகள் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர்கள் லிஸ்ட்

மகேந்திர சிங் தோனி – 256 கேட்ச்ஸ்

சையத் கிர்மானி – 160 கேட்ச்ஸ்

கிரன் மோரே – 110 கேட்ச்ஸ் 

ரிஷப் பண்ட் – 100* கேட்ச்ஸ்

தென்னபிரிக்காவுடன் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் 3 கேட்ச் பிடித்து 100 விக்கெட்டுகளை (92 கேட்ச்கள் + 8 ஸ்டம்பிங்) வீழ்த்தி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். இவர் 26 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருக்கிறார். இந்த சாதனை தோனி வசம் இருந்தது. தற்போது அதனை ரிஷப் பண்ட் மாற்றி அமைத்துள்ளார். தோனி 36 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்தியா 240 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனை சேஸ் செய்துவரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு இரண்டு விக்கெட்கள் பறிபோயின. நான்காம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் தென்ஆப்பிரிக்க அணி எடுத்திருந்தது.

நான்காம் நாள் ஆட்டம் மழையின் காரணமாக நீண்ட நேரம் நடைபெறாமல் இருந்தது. தற்போது தேனீர் இடைவேளைக்கு பிறகு, மழை பெய்வது குறைந்துள்ளதால், தென்னாப்பிரிக்கா அணி மீண்டும் பேட்டிங் செய்ய துவங்கியது. கேப்டன் டீன் எல்கர் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். இவருக்கு பக்கபலமாக தென்ஆப்பிரிக்க வீரர் வன் டர் டசன் விளையாடி வருகிறார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த ஜோடியின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறி வருகின்றனர். தற்போது 100 ரன்களுக்கும் குறைவாகவே இருக்கிறது தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,500FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles