3வது நாளில்: கடுமையாக போராடிய இந்தியா, விட்டுக்கொடுக்காத கேப்டன்; தென்னாபிரிக்கா 118/2!!

மூன்றாம் நாள் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது வெற்றி பெறுவதற்கு இன்னும் 122 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது

இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடையும்போது, இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு, துவக்கம் முதலே ரகானே மற்றும் புஜாரா இருவரும் அதிரடியாக விளையாட துவங்கினர் இதனால் இந்திய அணியின் ரன் மளமளவென உயர்ந்தது.

ஒருகட்டத்தில் இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தது. 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்திருந்தபோது, ரஹானே ஆட்டமிழந்தார். இவர் 58 ரன்களுக்கு வெளியேறினார். இவருடன் ஜோடி தொடர்ந்து அபாரமாக விளையாடிய புஜாரா 53 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து வந்த பண்ட் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

அதற்கு அடுத்ததாக வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். அதிரடியாக ஆடிய தாகூர் 28 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். முகமது சமி மற்றும் சிராஜ் என கீழ் வரிசையில் பந்துவீச்சாளர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மிகவும் சிறப்பாக நங்கூரம் போல் நின்று விளையாடிய விஹாரி 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி 239 ரன்கள் முன்னிலை பெற்றது.

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என சற்று கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணிக்கு மார்க்ரம் மிக சிறப்பாக துவக்கம் அமைத்தார். இவர் துரதிஷ்டவசமாக 31 ரன்கள் எடுத்திருந்த போது, தாகூர் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்ததாக வந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்த பீட்டர்சன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆக்ரோஷம் இல்லாமல் பந்து வீசி வந்த இந்திய அணிக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்த பிறகு மீண்டும் ஆக்ரோசமான பந்துவீச்சு தொடர்ந்தது. ஆனால் அதனை சிறப்பாக எதிர்கொண்ட தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் எந்தவித தவறும் செய்யாமல் தொடர்ந்து தடுப்பாட்டம் விளையாடி வந்தார். இவருக்கு மறுமுனையில் பக்கபலமாக இருந்த வாண்டர் டாசன் விக்கெட் விட்டுக் கொடுக்காமல் விளையாடினார்.

மூன்றாவது விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து திணறி வந்தனர். இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் டீன் எல்கர் 46 ரன்களும் டாசன் 11 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெறுவதற்கு 122 ரன்கள் மட்டுமே தேவை. அதே நேரம் இந்திய அணி 8 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. இந்த தருணத்தில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெறும் தருவாயில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,500FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles