வீடியோ: ‘என்ன பண்றிங்க ராகுல்’ எச்சரித்த நடுவர்; உடனடியாக கேஎல் ராகுல் சொன்ன பதில் இதுதான்!!

கே எல் ராகுல் செய்த தவறுக்காக, 2வது டெஸ்ட் போட்டியின் போது களத்தில் இருந்த நடுவர் அவரை எச்சரித்துள்ளார். இதன் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. நிதானமாக விளையாடிய கேஎல் ராகுல் அரைசதம் கடந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

கீழ் வரிசையில் அஸ்வின் பக்கபலமாக இருக்க, இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. அஸ்வின் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முதல் இன்னிங்சில் ராகுல் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு பந்து முடிந்த பிறகு இரண்டாவது பந்தை எதிர்கொள்ள தயாராவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார். பந்து வீச்சாளர் பந்து வீசும் பொழுது இன்னும் தயாராகவில்லை நிறுத்துங்கள் என்றும் கூறினார். இதனால் களத்தில் இருந்த நடுவர், “இன்னும் கொஞ்சம் சீக்கிரம், ப்ளீஸ் கேஎல் ராகுல்” மென்மையாக எச்சரித்தார். இதற்கு உடனடியாக பதில் அளித்த கேஎல் ராகுல், பந்துவீச்சு அணியின் கேப்டன், பந்து வீச்சாளர், மேலும் களத்தில் இருந்த நடுவர் என மூவரிடமும் மன்னிப்பு கேட்டார்.

அதன்பிறகு கே எல் ராகுல் எந்தவித தாமதம் செய்யாமல், அடுத்தடுத்த பந்துகளில் விரைவாகவும் எதிர்கொண்டார். இதன் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

பின்னர், முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை முதல் போட்டி போல இல்லாமல் இப்போது நிதானமாக விளையாடி னர். பீட்டர்சன் 62 ரன்களும், பவுமா 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. இதன் மூலம் 27 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஆல்ரவுண்டர் தாக்கூர் 61 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா மைதானங்களில் புதிய வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார்.

சற்று பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு துவக்க ஜோடியான கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் குறைந்த ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். இந்திய அணி திணறிக் கொண்டிருக்கும் பொழுது, புஜாரா மற்றும் ரகானே இருவரும் சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக விளையாடும் புஜாரா இம்முறை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

இரண்டாம் நாள் முடிவில் புஜாரா 42 பந்துகளுக்கு 35 ரன்கள் அடித்திருந்தார். ரஹானே 11 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் 58 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணி குறைந்த பட்சம் 200 ரன்கள் முன்னிலை வைத்தால் அடுத்த இரண்டு நாட்களுக்குள் தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்திவிட முடியும் என கிரிக்கெட் திறனாய்வாளர்கள் பலர் தங்களது கணிப்பில் கூறியுள்ளனர். மூன்றாம் நாளின் முதல் செஷன் விக்கெட் விழுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும் பகுதியாக பார்க்கப்படுகிறது. இதனை இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட் கொடுக்காமல் விளையாடிவிட்டால் வெற்றி இந்திய அணியின் பக்கம் தான் என யூகிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,500FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles